Helpful Tips....

சின்ன சின்ன டிப்ஸ்:

  • எந்த கம்பெனிக்கு ஆப்டிடுயுட் டெஸ்ட் (Aptitude Test)க்கு செல்வதென்றாலும் அதற்கு முன்பு அந்த கம்பெனி பழைய கேள்வித்தாள்களை படித்துவிட்டு செல்லவும். (நான் சிண்டல் (syntel) எழுத போகும்போது பழைய கேள்விகளை படித்துவிட்டு போனதால் எளிதாக தேர்வானேன். 50 கேள்விகளில் 30 கேள்விகள் பழைய கேள்விகளில் இருந்தே வந்தது. (ஆனால் Group discussionல ஊத்திக்கிச்சு :-) ) www.freshersworld.com ல் பழைய கேள்வித்தாள்கள் இருக்கும்


  • முடிந்த வரை நண்பர்களுக்கு உதவவும். எந்த கம்பெனியாவது வாக் இன் (Walk In) நடத்தினால், நண்பர்கள் அனைவருக்கும் சொல்லவும். எங்கே அவர்கள் நமக்கு போட்டியாக வந்துவிடுவார்களோ என்று நினைக்கவேண்டாம். பொறாமை நம்மை அழித்துவிடும்.


  • 1 மணி நேரத்தில் 50-60 கேள்விகள் என்று ஆப்டிடுயுட் டெஸ்ட் இருந்தால், முதலில் எல்லா கேள்விகளையும் வாசிக்கவும். ஏனெனில் ஒரு சில கேள்விகளுக்கு படித்தவுடனே விடை தெரிந்துவிடும் (Next day after Tuesday…1,3,5,?). அதனால் துவக்கத்தில் கொஞ்சம் கடினமாக இருக்கும் கேள்விகளில் நேரத்தை வீணாக்காதீர்கள்.


  • இன்போஸிஸ் தயார் செய்ய: முதலில் Quantitative Aptitude, அடுத்து shakuntala Devi’s Puzzle to Puzzle You & More Puzzles, அடுத்து Puzzles and Teasers by George Summers, மிக முக்கியமானது பழைய கேள்வித்தாள்கள்.


  • சின்ன சின்ன ப்ரோகிராம் எந்த நேரத்தில் கொடுத்தாலும் போடுமாறு தெரிந்து வைத்துக் கொள்ளவும். (Fibanocci Series, Find Prime Number, find whether Palindrome, factorial,swap the two numbers without using temp variable, sum of a number……………….)


  • வாக் இன் (Walk In) நடத்தினால் முடிந்தவரை சீக்கிரமாக சென்றுவிடவும். 10 மணி வாக் இன் என்றால் 7-8 மணிக்கே சென்றாலும் தப்பில்லை. அழைப்பின் பேரில் (Call Letter) சென்றால் 30 நிமிடம் முன்னால் சென்றாலே போதும்.


  • ஒவ்வொரு கம்பெனியாக சென்று ரெசுமே கொடுத்து நேரத்தை வீணாக்காதீர்கள். பெரும்பாலான கம்பெனிகள் இ-மெயிலில் தான் ரெசுமே வாங்குகிறார்கள். அந்த நேரத்தில் உட்கார்ந்து படியுங்கள்.


  • மீண்டும் சொல்கிறேன். தெரியாதவர்களுக்கு சொல்லி கொடுங்கள். நான் அனைத்தையும் படித்துவிட்டு சொல்லி தருவேன் என்று சொல்லாதீர்கள்.


  • வேலை கிடைக்கிற வரைக்கும் சும்மா வீட்ல இருக்கலாம்னு நினைக்காதீங்க. சென்னையோ, பெங்களூரோ வந்து கொஞ்சம் கஷ்டப்படுங்க. அப்ப தான் வேலை தேடற வெறி வரும். குண்டு சட்டில குதிரை ஓட்ற வேலையெல்லாம் ஆகாது. முடிஞ்ச வரை Communication skillsஐ வளர்த்துக்கோங்க. உங்களோட டெக்னிக்கல் ஸ்கில்ஸை விட இது தான் அதிகமா வேலை செய்ய போகுது. அதனால அதுல கவனத்தை செலுத்தவும்.


  • தெரியாததை தயக்கமில்லாமல் நல்லா படிக்கிற (சொல்லித்தற) பசங்ககிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோங்க. அதே மாதிரி தெரியாதவங்களுக்கு சொல்லி கொடுங்க. உலகம் ரொம்ப பெருசு, நீங்க சொல்லி தருவதால் உங்ககிட்ட கேட்டவன் உங்க வேலையை தட்டிட்டு போயிடுவானு பொறாமைல சொல்லி தராம விட்டுடாதீங்க. அந்த அளவுக்கு சின்ன புள்ளை தனமா இருக்க மாட்டீங்கனு தெரியும். இருந்தாலும் ஒரு தடவை சொல்லிடறேன்.


எப்பவும் தயாரா இருக்கவும்… All the very best my dear friends.…
இறுதியாக என் பள்ளியின் தாரக மந்திரமான “ உழைப்பே உயர்வு தரும்
(Labor Omnia Vincit)”
என்பதை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
முடிந்தவரை நான் அனுபவித்ததை உங்களுடன் பகிர்ந்துவிட்டேன்.
சீக்கிரம் வாங்க software industrialக் உங்களுக்காக நிறைய Treat காத்துக்கிட்டு இருக்கு


Best Regards..,
Karunakaran.G

Image Gallery

imgimgimg img

About

img

Hi friends... This is Karunakaran.G
Welcome to my personal website keep Rocking...........

Contact

Wanna Get in touch with me?


E-mail: gr.karunakaran@yahoo.com
Telephone : +91-044-27602114
Mobile:+918012663361
Thiruvallur, India.