Technical Interview...


karan4

அடுத்த சுற்று “Technical Interview”. இந்த சுற்று பெரும்பாலும் உங்கள் Resume பொருத்தே இருக்கும்.

சொந்தமாக project செய்திருந்தாலோ அல்லது project பற்றி ஓரளவு தெரிந்திருந்தாலோ, அதைப் பற்றி அவர்கள் கேட்கும் முன்னரே தெரிவிக்கவும்.

பிறகு அவர்கள் அதிலிருந்தே கேட்பார்கள் ஓரளவிற்கு ஒப்பேற்றிக் கொள்ளலாம். முடிந்த அளவு project செய்திருக்கும் Languageஐ Area Of Interestல் போடவும்.

Area of interestல் இருப்பதை ஓரளவிற்கு நன்றாக தெரிந்துக் கொள்ளுங்கள். Area of interestல் 2ற்கு மேல் போடாதீர்கள். ஏனென்றால் உங்களுக்கு OOPS தான் தெரியும் ஏன்றால் கேள்விக் கேட்பவர் அதில் திறமையில்லாதவராக இருந்தாலும் அதிலே கேட்பார். அதில் அவர் திறமையுள்ளவராக இருந்தாலும் Fresher என்பதால் ஓரளவு சுலபமாகவே இருக்கும்.

அதனால் 4-5ஐப் போட்டு அதில் அறைகுறையாக தெரிந்து கொள்வதைவிட 1-2 போட்டு அதில் அதிகமாக தெரிந்து கொள்வதே சிறந்தது. அகல உழுவதைவிட ஆழ உழுவதே சிறந்தது

முடிந்தவரை Group discussion செய்யவும். தெரியாதவர்களுக்கு சொல்லிக் கொடுக்கவும். தெரியாதவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதனாலயே அதிகம் கற்றுக் கொள்ள முடியும். படித்ததும் மறக்காது. நண்பர்களிடையே Mock Interview செய்து கொள்ளவும்.

உங்களுடைய எந்த ரெக்கார்ட் நோட்டுகளையும் தொலைக்காதீர்கள். நான் எந்த இன்டர்வியூவிற்கு சென்றாலும் அதற்கு முதல் நாள் என் ரெக்கார்டை ஒரு முறை பார்த்துவிட்டுத்தான் செல்வேன்.

முதல் வருட ரெக்கார்ட் நோட் மிக முக்கியம். சின்ன சின்ன C ப்ரோக்ராம் படிக்க அது உதவும்… ரெக்கார்ட் நோட் இல்லையென்றால் ஜுனியர் பசங்களை பிடியுங்கள்… கண்டிப்பா ஜெயிக்கலாம்!!!

நன்றி
உழைப்பே உயர்வு தரும்!!!

Note:
Area of interest தேர்ந்தெடுப்பது.

C நன்றாக தெரியுமென்றால் Data Structure போட்டுக் கொள்ளலாம்.
Stack, Queue, Linked List, Search, Sort Program எல்லாம் எழுத கற்றுக் கொள்ளவும்.
என் நண்பன் ஒருவனுக்கு Linked List Program எழுதனவுடன் ஒரு MNCல் Offer letter கொடுத்துவிட்டார்கள்.
புரிந்து படித்தால் Data Structure வாழ்க்கை முழுக்க மறக்காது.
C++, Java நன்றாக தெரியுமென்றால் OOPS போட்டுக் கொள்ளலாம்.
Oracle நன்றாக தெரியுமென்றால் RDBMS போட்டுக் கொள்ளலாம். கொஞ்சம் லாஜிக்கலாக யோசித்துப் போடவும்.





Best Regards..,
Karunakaran.G

Image Gallery

imgimgimg img

About

img

Hi friends... This is Karunakaran.G
Welcome to my personal website keep Rocking...........

Contact

Wanna Get in touch with me?


E-mail: gr.karunakaran@yahoo.com
Telephone : +91-044-27602114
Mobile:+918012663361
Thiruvallur, India.