Personal Interview...

karan5

நேர்முக தேர்வை (Personal Interview) அணுகுவது எப்படினு இந்த பகுதியில் பார்ப்போம்............................





செய்யக் கூடாதவை:

  • அடிக்கிற மாதிரி கலர்ல டிரஸ் போடதீர்கள். (நீங்கள் ராமராஜன், விஜயகாந்த், சிம்பு ரசிகரா இருக்கலாம். அதுக்காக உங்க பாசத்த இண்டர்வியூவில் காட்ட வேண்டாம்)


  • இண்டர்வியூவின் போது சிவிங் கம் (Chewing Gum) சாப்பிடாதீர்கள்.


  • உங்கள் வறுமை நிலைமையை சொல்லி வேலை கேட்காதீர்கள்.


  • அதிக பிரசங்கி தனமாக எதுவும் பேசாதீர்கள். (Dont act over smart)


  • இந்த ஊரில்தான் வேலை செய்வேன் என்று அடம்பிடிக்காதீர்கள்.

செய்யவேண்டியவை:

  • 30 நிமிடத்திற்கு முன்னாதக இண்டர்வியூ நடக்கும் இடத்திற்கு சென்றுவிடவும்

  • Formalsல் செல்லவும். முழுக்கை சட்டை, பேண்ட், ஷீ அணியவும்.(Even if the company does not have dress code)

  • தேவையான certificate கையில் வைத்திருக்கவும். அதற்கு ஒரு செக்-லிஸ்ட் வைத்திருக்கவும். சர்ட்டிபிகேட்களை சரியான முறையில் அடுக்கி வைக்கவும். தேவைப்படும் போது எடுக்க வசதியாக இருக்கும்.

  • உங்கள் பெயரை அழைத்தவுடன் உள்ளே செல்லவும்.

  • உள்ளே சென்றவுடன் நட்புடன் சிரித்து வாழ்த்து சொல்லவும். (Have a Friendly Smile and Say “Hi/Hi, ”. Let it be casual)

  • இண்டர்வியூ எடுப்பவர் கை கொடுத்தால் மட்டும் கை கொடுக்கவும்.

  • கை கொடுக்கும் போது ஓரளவு இறுக்கமாக கை கொடுக்கவும் (Let it be Firm to show ur confident). பயம் வேண்டாம்.

  • கேள்வி கேட்பவரின் கண்ணைப் பார்த்து பெசவும். 4-5 பேர் இண்டர்வியூ பேனலில் இருந்தால், கேள்வி கேட்பவரைப் பார்த்து பதில் சொல்லவும்.

  • தன்னம்பிக்கையுடன் பதில் சொல்லவும். இதுவே வேலை வாங்குவதற்கு உதவும்.

  • செல் போனை தவிர்க்கவும். எடுத்து சென்றாலும் அணைத்துவிடவும் (Switch Off)

  • முடிந்தவரை உண்மையை பேசவும்.


பெரும்பாலான கம்பெனிகளில் முதல் கேள்வி, உங்களைப் பற்றி சொல்லுங்கள் என்பதுதான். (Tell me about yourself)
என்னைக் கேட்டால் இந்த கேள்விக்கு பதிலை மனப்பாடம் செய்து கொள்ளலாம்.
ஆனால் ஒப்பிக்கற மாதிரி இருக்கக்கூடாது. பொறுமையா நிதானமாக சொல்வது மாதிரி இருக்க வேண்டும். (நான் மனசுக்குள்ளே இதை 100 முறையாவது சொல்லி இருப்பேன்).

Tell me about youselfல் நான் சொல்லியது இதுதான்:
என் பெயர். கல்வி விவரம் (கல்லூரி விவரம் போதும்)
குடும்பம் (அப்பா, அம்மா, சகோதர/சகோதிரியின் இன்றைய நிலை. அவர்கள் பேர் எல்லாம் சொல்ல தேவையில்லை.
படிக்கிறார்கள் என்றால் படிக்கிறார்கள்/ வேலைக்கு செல்கிறார்கள் என்றால் என்ன வேலை அவ்வளவுதான்)
உங்கள் பொழுது போக்கு (அதிகமாக சொல்லாதீர்கள். உண்மையை சொல்லவும். நான் சொன்னது சமையல்)
உங்கள் பலம்.
அவர்கள் கேட்டால் பலவீனத்தை சொல்லவும். பலவீனமும் ஒரு வகையில் பலமாக இருக்குமாறு சொல்லவும். நான் சொன்னது, எனக்கு இரக்ககுணம் அதிகம், அதனால் மற்றவர்களுக்கு உதுவுகிறேன் பேர்வழியாக என்னையே கஷ்டப்படுத்தி கொள்வேன். ஆனால் அந்த பணி வெற்றியடைந்த பிறகு மகிழ்ச்சியாகவே உணர்கிறேன்.

முடிந்த அளவு 90-120 நொடிகளுக்குள் முடித்து கொள்ளவும். குறைந்த பட்சம் 20 முறையாவது சொல்லி பார்க்கவும்.
தன்னம்பிக்கையுடன் பேசவும், தலைகனத்துடன் வேண்டாம்.



<


Best Regards..,
Karunakaran.G

Image Gallery

imgimgimg img

About

img

Hi friends... This is Karunakaran.G
Welcome to my personal website keep Rocking...........

Contact

Wanna Get in touch with me?


E-mail: gr.karunakaran@yahoo.com
Telephone : +91-044-27602114
Mobile:+918012663361
Thiruvallur, India.