Software Engineer..................

karan

இந்த தொடர் மூலம் software industrialல வேலை தேடுவது எப்படினு எனக்கு தெரிஞ்ச அளவுக்கு எழுதலாம்னு இருக்கிறேன். ஆங்கிலம் அதிகமா பயன்படுத்துவேன். தமிழ் கூறும் நல்லுலகம் என்னை மன்னிக்குமாக???

software industrialல வேலை வாங்குவதற்கு கடின உழைப்பைவிட புத்திசாலித்தனமான அணுகுமுறையே வேண்டும்.

“ We need to do Smart Work, no need for Hard work
.

புத்திசாலித்தனமான அணுகுமுறைக்கு புத்திசாலியா இருக்கனும்னு அவசியமில்லை

இப்ப நான் சொல்ல போறது, காலேஜ் முடித்து வேலை தேடுபவர்களுக்கு. (நான் சொல்வது எல்லாம் average மற்றும் Below average மாணவர்களுக்கு. புத்திசாலி மாணவர்களுக்கு சொல்லி தரும் அளவுக்கு என்னிடம் சரக்கு இல்லை)

நீங்க எந்த இஞ்ஜினியரிங் (even MCA/ MSc) வேண்டுமென்றாலும் படித்திருக்கலாம். கம்ப்யூட்டர் இஞ்ஜினியர்களுக்கு மட்டும் தான் Software field என்று நினைக்காதீர்கள்.

என்னுடைய அண்ணனுக்கு மேனாஜராக இருந்தவர்கள் மெக்கானிக்கல் மற்றும் சிவில் படித்தவர்களே. கம்ப்யூட்டர் படித்தவர்களுக்கு கொஞ்சம் ஈஸியாக இருக்கலாம். ஆனால் யார் வேண்டுமென்றாலும் கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ளலாம். அதற்கு தேவையான ஒன்று ஈடுபாடு மட்டுமே

நீங்க Fresherஆக வேலை தேடுபவர்கள் என்றால் உங்களிடம் இந்த புத்தகங்கள் இருப்பது அவசியம்.

 1. Quantitative Aptitude by R.S. Aggarwal
 2. Dictionary (even u can have the E-copy, its OK)
 3. Let Us C
 4. Pointers in C
 5. The complete Reference Java - Herbert schildt (for basic concept java-Balagurusamy book)
 6. c++ -Balagurusamy book
 7. Shakunthala Devi (Puzzles to Puzzle you, More Puzzles)

இதை எப்படி படிப்பது என்பது பின்னால் சொல்கிறேன்.சில தவறான எண்ணங்கள்: (இதெல்லாம் நான் படிக்கும் போது நினைத்துக் கொண்டிருந்தது).

 1. Resume அதிக பக்கம் இருக்கணும்.
 2. Area of Interest நிறைய இருக்கணும்.
 3. Quants, analytical, Verbal எல்லாம் GRE, GMAT, CAT படிப்பவர்களுக்கு தான்.
 4. Shakuntala Devi Puzzles படிச்சா போதும் இன்போஸிஸ்ல வேலைக்கு சேர்ந்துடலாம்.
 5. எதாவது ஒரு Centerல காச கட்டிட்டு certificate வாங்கிட்டா போதும் ஒரு நல்ல companyல வேலைக்கு சேர்ந்திடலாம்.
 6. முக்கியமான ஒன்று: பெங்களூர் போன சுலபமா வேலை வாங்கிடலாம். சென்னைல openings கம்மி.
 7. அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்குதான் வேலை சுலபமா கிடைக்கும்.
 8. course முடிச்சிட்டு எதாவது ஒரு training centerல காச கொடுத்தா ஈசியா வேலைக்கு சேர்த்திடலாம்.
 9. தினமும் எல்லா companyக்கும் போய் Resume கொடுக்க வேண்டும்.
 10. (இன்னும் நிறைய இருந்தது. எல்லாம் மறந்து போச்சு. ஞாபகம் இருப்பவர்கள் சொன்னா நல்லா இருக்கும்)

இது எல்லாம் முட்டாள்தனம்னு வேலை தேடும்போது தான் தெரிந்தது. சரி இப்ப என் கதைய சொல்றேன்.

நம்ம பசங்களுக்கு எல்லாம் (என்னையும் சேர்த்து) இங்கிலிஸ்ல
அவ்வளவு நல்லா பேச வராது. காரணம் காலேஜ்ல நாமாலும்
இங்கிலிஸ்ல பேச மாட்டோம். பேசறவனையும் விட மாட்டோம்
ஏன்னா காலேஜ்ல படிக்கும் நம்மளைப் பொருத்தவரை

“இங்கிலீஸில் பேசவது ஒரு பாவச்செயல்.
இங்கிலீஸில் பேசவது ஒரு பெருங்குற்றம்.
இங்கிலீஸில் பேசவது ஒரு மனிதத்தன்மையற்ற செயல்”

கடலை போடுபவர்கள் மட்டும் தான் இங்கிலீஸில் பேசுவார்கள். நம்மல மாதிரி ஆளுங்க எல்லாம் காலேஜ்க்கு வந்தாலே பெரிய விஷயம். அதுல போயி இங்கிலீஸ்ல பேசிட்டாலும் (இதுக்கெல்லாம் இப்ப அனுபவித்தோம்).

ஆனால் எங்களை மாதிரி கூட்டம் தான் எல்லா காலேஜ்லயும் அதிகம். Cosmopoliton cityல படித்த நாங்களே இப்படினா (சும்மா build-up ), மத்த ஊர்ல படித்தவர்களின் நிலைமை இன்னும் மோசம்.

முடிஞ்ச வரை Communication skillsஐ வளர்த்துக்கோங்க. உங்களோட Technical skill விட இது தான் அதிகமா வேலை செய்ய போகுது. அதனால அதுல கவனத்தை செலுத்தவும்.

Software Industryக்கு நல்லா இங்கிலீஸ் பேச தெரிஞ்சா eassyயா . வேலை வாங்கிடலாம், வாழ்க்கையும் ஓட்டிடலாம். ஆனால் நமக்கு அங்க தான் தகராறு. Linked List Programகூட 15 நிமிஷத்துல போட்டுடுவன். ஆனால் 15 நிமிஷம் தொடர்ந்து இங்கிலீஸ் பேசனும்னா??? ஆண்டவா ஏன் இப்படி சோதிக்கிறனு தோணும்!!!

நான் BE முடித்தது MAY 2010ல். ஏங்க காலேஜ் தவிற மத்த collegeல எல்லாம் Campus Placement இருந்தது.சொல்லப் போனால் எங்க collegeல எல்லாம் Placementஏ இல்லை(Arignar anna institute of science and Technology, Sriperumbudur.). எங்க சீனியர் செட்ல அதை விட மோசம் சரி வேலை தேடி எங்கு போகலாம்னு யோசிக்கும் போது பெங்களூர்னு முடிவு பண்ணோம்.

நாங்க பெங்களூர் வந்தவுடன் புரிந்து கொண்ட விஷயம் நம்மைத்தவிர (தமிழர்களை) எல்லாரும் நல்லா இங்கிலீஸ் பேசுறானுங்க (ஆந்திராக்காரர்கள் நம்மைவிட மோசம்). நம்ம ஊர் பொண்ணுங்களும் பட்டையைக் கிளப்புறாங்க. (இதுக்கு தான் கடலை போடும் போது இங்கிலீஸ்ல பேசறாங்கனு புரிஞ்சிது).

எங்க கூட வந்த ஒருத்தனுக்கு இங்கிலீஸ்ல பேசனா வேலை கிடைத்துவிடும்னு நம்பிக்கை. நம்ம முதல் ரவுண்ட் கிளியர் பண்ணாதான இண்டர்வியூ. அதுக்கு முதல்ல தயார் பண்ணுவோம்னு நான் சொன்னன். அவன் என் பேச்சைக் கேக்காம “Call Center Training”ல 5000 குடுத்து சேர்ந்தான்.

முதல் வாரம் அவர்கள் எடுத்தது Basic Grammer (Tense, Verb, Noun, Adjective…). நம்ம எல்லாம் அதை எட்டாவதுல படித்து இருப்போம். இரண்டாவது வாரம் ஒரு தலைப்பை கொடுத்து 10 நிமிடம் பேச சொன்னார்கள். மூன்றாவது வாரம் GD.கடைசி வாரம் திடீரென்று தலைப்பை கொடுத்து பேச சொல்வார்கள்.இந்த Trainingக்கு எதற்கு 5000?


இதை நாங்களே ரூம்ல செய்யலாம்னு யோசிச்சி பண்ண ஆரம்பித்தோம்.

முடிந்தவரை ஒருவருக்கொருவர் இங்கிலீஸ்லயே பேசிக் கொண்டோம் (இது பயங்கர ஜோக்காக இருக்கும்). தினமும் ஒருவர் மற்றவர்களுக்கு தலைப்பை குடுத்து பேச ஆரம்பித்தோம்.முதலில் மிகவும் சுலபமான தலைப்பை குடுத்துக் கொண்டோம். பிறகு ஒருவனுக்கு நான் சுலபமான தலைப்பு என்று குடுத்தது அவனுக்கு கடினமாக தோன்ற பதிலுக்கு அவன் அடுத்தவனுக்கு கடினமான தலைப்பை குடுக்க… நல்லா சூடு பிடிக்க ஆரம்பித்தது.

கண்ணாடியைப் பார்த்து பேசிப்பழகுவது என் நண்பன் ஒருவன் சொன்ன அறிவுரை. அது எங்கள் அனைவருக்கும் பயன்பட்டது. 1 மாசத்துல எங்களுக்கே நம்பிக்கை வர ஆரம்பித்தது.

நான் சந்தித்த நபர்களில் பெரும்பாலும் எங்களை போலவே ஆங்கிலம் பேச தயங்குபவர்கள் அதிகம். அவர்களுக்கு நான் சொன்னதெல்லாம் இதுதான். ஆங்கிலம் என்பது நம் தாய் மொழியல்ல. அது நம் அறிவின் அளவுகோலும் அல்ல. அதில் நாம் பண்டிதர்களாக வேண்டிய தேவையுமில்லை. ஓரளவிற்கு திக்காமல் திணராமல் நாம் சொல்ல நினைத்ததை சொன்னாலே போதும்.

தினமும் “The Hindu” editorial page சத்தம்போட்டு படிக்கவும். தினமும் குறைந்தது 1-2 மணி நேரம் ஆங்கில செய்தித்தாள் படிக்கவும், GD அல்லது தலைப்பைக் கொடுத்துப் பேச பயன்படுத்திக் கொள்ளலாம். தெரியாத வார்த்தைகளை எழுதி வைத்துக்கொண்டு அதை எப்படியும் தினமும் பயன்படுத்தவும்.

பேசுவதற்கு ஆள் இல்லை என்றால் Airtel/Aircel customer careக்கு போன் செய்து பேசவும். என் பக்கத்து ரூம்ல இருப்பவன் இதை தான் செய்வான். அவனுடைய கேள்விகள் எதுலயும் logic இருக்காது. இருந்தாலும் அவன் தயங்காமல் முப்பது நிமிடம் பேசுவான். (eg. Is Airtel better than Hutch, Y there is no signal in Electronic City?, which is the better plan in Airtel….)

யார் கிண்டல் செய்தாலும் வருத்தப்படாதீர்கள்.

“கிண்டல் செய்ற எந்த நாயும் சுண்டல் கூட வாங்கி தரமாட்டானுங்கனு மனதிற்குள் சொல்லிக்கொள்ளவும்“

தயவு செய்து பணத்தை “Call Center training”க்கு குடுத்து வீணாக்காதீர்கள். எந்த மொழியையும் நமக்குள் யாரும் திணிக்க முடியாது, பழக பழக தானாக வந்துவிடும்……

Keep in mind that how you are explaining about your projects will give you job. So be clear about your projects.


Best Regards..,
Karunakaran.G

Image Gallery

imgimgimg img

About

img

Hi friends... This is Karunakaran.G
Welcome to my personal website keep Rocking...........

Contact

Wanna Get in touch with me?


E-mail: gr.karunakaran@yahoo.com
Telephone : +91-044-27602114
Mobile:+918012663361
Thiruvallur, India.